கஷ்டப்பட்டு படிச்சு, ஒரு வேலைக்கு சேர்ந்து, கைலே நாலு காசு பார்த்தவுடனேயே நம்ம ஆளூங்களுக்கு வர்ற ஆசைகளில் ஒண்ணா இருக்கிறது கார் வாங்கறது.(பைக்கெல்லாம் அந்த காலம் மாமு!...). காசு இருக்குதேன்னு கண்ணுல பட்ற ஏதாவது கார் வாங்க முடியுமா என்ன? லுக்கா இருக்கிற காரை வாங்கி அப்புறமா மெயிண்டனன்ஸில் நமக்கு ஆப்பு வெச்சா என்ன பண்றது. பல பேர் இந்த மாதிரி தப்பை செஞ்சுகிட்டு இருக்கோம்.ஒரு காரைப் பார்த்தவுடன் அதன் பர்பார்மன்ஸ்,மைலேஜ் பார்த்து,நமக்கு எது சரிபட்டு வரும்னு உறுதி செஞ்ச பிறகு வாங்கனும்.
சரி இதெல்லாம் கடந்து கடைசியா வர்ற கேள்வி, மெயிண்டனன்ஸ்,அதிலும் குறிப்பா பெட்ரோல் காரா இல்ல டீசல் காரா.விஜய் டீவியில் நீயா? நானா? வில் இடம் பெறக்கூடிய தலைப்பு. டீசல் கார்னா-டீசல் செலவு கம்மி.பெட்ரோல் கார்னா-பர்பார்மன்ஸ் நல்லா இருக்கும்னு நம்மள்ள ஒரு மேதாவி சொல்லி குழப்பி இருப்பாங்க
இப்போ வர்ற கார்களின் பர்பார்மன்ஸ்படி டீசலுக்கும் பெட்ரோல் காருக்கும் அதிகம் வித்தியாசமில்லை. டீசல் கார்களின் இன்ஞின்கள் நல்லா ட்யூன் செஞ்சு பெட்ரோல் காரை விட சூப்பரா பர்ஃபார்ம் பண்ணுது
'டேய் வெண்ண ... அப்புறம் எப்படி தாண்ட இதை செலக்ட் செய்யறது.போட்டு குழப்புறியே' என்று திட்டுவது காதில் விழுது.
டீசல் காரா-பெட்ரோல் காரானு செலக்ட் பண்ணுவது அவரவர் தேவை,சூழ்நிலை பொறுத்து மாறும்.எந்த காரை வாங்கபோறோம்;தினமும் எவ்வளவு தூரம் ஓட்டுவோம்;எவ்வளவு வருஷம் அந்த காரை ஓட்டுவோம்னு யோசிச்சு கவனமா வாங்கனும்.
கார் ஷோரும்களில் கார்களை ப்ற்றிய விவரங்களை தரும் Catalogue கில் காரைப் பற்றிய விவரங்கள் இருக்கும். அதை மட்டும் படிச்சு,அதை அப்பிடியே நம்பிட கூடாது.காரை நாமே ஓட்டிப் பார்க்க வேண்டும்.இப்பொழுதுதான் எல்லா கார்களும் டெஸ்ட் டிரைவ் பண்ண தருகிறார்களே.அப்படி ஓட்டிப் பார்க்கும்பொழுது,அந்த கார் நமது தேவையை பூர்த்தி செய்யுதானு தெரிஞ்சுக்கனும்.பர்பார்மன்ஸ் நல்லா இருந்தால் மெயிண்டனன்ஸ் செலவு அதிகமாகி விடும்.
முன்னெல்லாம் டீசல் கார் என்றாலே லாரி சத்தம் கேட்கும்.ஆனால் சத்தமில்லாத வகையில் டீசல் இன்ஞின்கள் வருகின்றன்.என்னயிருந்தாலும் பெட்ரோல் இன்ஞின் போல ஸ்மூத்தா இருக்காது.அதேமாதிரி டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஞின்கள் டீசல் இன்ஞின்களை விட அதிகம் சத்தம் வரும்.
பர்பார்மன்ஸை பொறுத்தவரை ஆரம்ப வேகத்திலேயே பெட்ரோல் இன்ஞினின் டார்க் நல்லா இருக்கும்.டீசல் இன்ஞின்,மிதிக்க மிதிக்கதான் வேகம் பிடிக்கும்.இரண்டும் ஒரே நேரத்தில் 0-60 கி.மீயை எட்டி விடும்.ஆனால் அந்த வேகத்தை பெட்ரோல் இன்ஞினும் கார் இன்ஞினும் எப்படி ரீச்சாவதிலேயே வித்தியாசமே தெரியும். 2000-4000 RPM அளவுக்குள்ளாகவே டீசல் இன்ஞின் டாப் வேகத்தை அடைந்துவிடும்.ஆனால் அதுக்குள்ளே நம்ம கியரை மாற்றிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கும்.பெட்ரோல் இன்ஞின்ல இந்த தொல்லை இருக்காது.பவர் டெலிவரியும் கியர்களை மாற்றுவதும் சீராக இருக்கும்.
அதே மாதிரி காடு,மலை போல உள்ள இடங்களில் ஒட்டுவதற்க்கு டீசல் இன்ஞினே கரெக்ட்.ஏன்னா டீசல் இன்ஞினின் புல்லிங் பவர் அதிகம்.அதனால் டீசல் கார்கள் ஈஸியாக மலை,மேடுகளில் ஓட்டலாம்.
அடுத்ததாக பட்ஜெட்.பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறதால டீசல் கார்தான் பட்ஜெட் கார்னு நினைக்ககூடாது.டீசல் கார்ல மெயிண்டனன்ஸ் செலவு அதிகம்.ஆனால் Road Tax,Insurance செலவுகள் டீசல்களுக்கு கம்மி.பெட்ரோல் காரை விட டீசல் காரின் விலை 20% மேலாகும். இதற்கு காரணம் பெட்ரோல் இன்ஞினை விட டீசல் இன்ஞின் பாடியும் ஸ்பேர் பார்ட்ஸும் ஸ்ட்ராங்காக இருக்கும்.ஏனென்றால் இன்ஞினுக்குள் அதிகபட்ச ப்ரஷரில் டீசல் எரியரதால கூடுதல் Metal உபயோகபடுத்தி செஞ்சு இருப்பாங்க.இதனால் இன்ஞின் எடை கூடும்.எடை கூட,அதற்கேற்ற சஸ்பென்ஷனும்,பாடியும் ஸ்ட்ராங்காக இருக்குனும்.அதேபோல் கிளட்ச்,கியர் பாக்ஸீம் அதிகப்படியான டார்க்கை சமாளிக்கப்படி இருக்கும்.
இன்ஞின் சவுண்டு குறைப்பதற்காகவும்,எக்ஸாஸ்ட் சிஸ்டமும் விலை உயர்வுக்கு காரணமாகின்றன.
மைலேஜில் டீசல் கார் பெட்ரோல் காரை விட கிட்டத்தட்ட லிட்டருக்கு 4 கி.மீ அதிகம்.டீசல் காருக்கு ஒருவர் கொடுக்கும் விலை பெட்ரோல் காரை விட சுமார் 80 ஆயிரம் வரை அதிகம்.இந்த விலையை டீசல் காரை சுமார் 4 வருடங்களுக்கு மேல் ஓட்டினால் தான்,ஆரம்பத்தில் அவ்ர் கொடுத்த 80 ஆயிரம் ரூபாயை டீசல் செலவில் சரிகட்ட முடியும்.
டீசல் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை பெட்ரோல் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலையைவிட அதிகம்.ரேடியேட்டர் விலையும் சுமார் 3,000 ரூபாய் அதிகம்.டீசல் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும்.
டீசல் காரின் விலை அதிகமாக இருப்பதால் காரில் வசதியும் குறைவு.அலாய் வீல்,ABS,க்ளைமேட் கண்ட்ரோல் இருக்காது.
அதனால் டீசல்,பெட்ரோல் செலக்ட் பன்னுவதற்க்கு முன் இதையெல்லாம் யோசிச்சு முடிவெடுங்கள்.
No comments:
Post a Comment