வாட்டர் பியூரிபையர்கள் கிருமிகளை நீக்குவதில்லை
இந்தியாவில் விற்கப்படும் வாட்டர் பியூரிபையர்கள் எதுவும் கிருமிகளை நீக்குவதில்லை என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது தொற்றுநோய்கிருமிகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனம். அரசு உதவியுடன் செயல்படும் (என்.ஐ.வி) இந்த அமைப்பு எட்டு பியூரிபையர் கம்பெனிகளை சோதனைக்கு எடுத்துக்கொண்டது. அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அமைப்பு இந்த சோதனைக்கு உதவியது. ஆய்வில் என்.ஐ.வி மற்றும் இந்திய மெடிக்கல் ஆராய்ச்சி மையம், அரசின் சுகாதாரத்துறை உட்பட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் நிறுவனங்களின் கார்பன் பில்டர், செராமிக் கேண்டில் பில்டர், உட்பட பல பாகங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டது.அதில் எட்டு கம்பெனிகளில் ஆறு கம்பெனிகள் தரம் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உள்ள கிருமிகளுக்கு அழிவில்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment