பயிரும் உயிரும்
பச்சை பயிர் வளர்க்க
படிக்க உயிர் கொடுத்து
அனுப்பிய பெற்றோர்
என்ன தவமும் பாவமும் செய்தனோரோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட பேருந்தில் கருகிய (க)விதைகளை
எரித்த கயவர்களுக்கு
எப்போதுதான் யமன் வருவான்
என்னவென்று சொல்வதம்மா !
எரிந்தது கனவா ?
இல்லை சமுதாயமா? ??
இதற்குமேல் இது வேண்டாம்
வேண்டும் முற்றுப்புள்ளி
No comments:
Post a Comment