Tuesday, August 31, 2010

தமிழா இன உணர்வு கொள்

ஒரு நட்ப்பான நாட்டிற்கு இருக்கும் ரோசம் கூட நமக்கு இல்லை ஏன்???

எரித்திரியாவில் நிறுத்தப்பட்டுள்ள வான்புலிகளின் 6 போர் விமானங்களை கையகப்படுத்த இலங்கை அரசு தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கை ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே மேற்கொண்டுள்ளEritria Map முயற்சிகளுக்கு குமரன் பத்மநாபன்தான் வெளிப்படையான பெரும் துணையாகத் திகழ்கிறார்.

இந் நிலையில் எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் வான்புலிகளுக்குச் சொந்தமான 6 லேசு ரக விமானங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மேற்கொண்டுள்ளதாக அரசு ஆதரவு சிங்கள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த 6 விமானங்கள் தொடர்பான தகவல்களையும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு குமரன் பத்மநாபன்தான் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த 6 விமானங்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் கேபி உதவியுடன் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கேபியை புலிகளின் பிரதிநிதியாகக் காட்டி விமானங்களை எரித்திரியாவிடம் இலங்கை கோரியது. ஆனால், அவற்றை எரித்ரியா தர மறுத்துவிட்டது.

இந்த விமானங்கள் புலிகளால் வாங்கப்பட்டவை. எரித்திரியா நாட்டில் ஆஸ்மாறா என்னும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எரித்திரிய அரசாங்கம் கோத்தபயாவிடம் கொடுக்க மறுத்துவிட்டதோடு, அதனை அதன் உரிமையாளர்களான புலிகளிடம்தான் கொடுப்போம் என உறுதியாகக் கூறிவிட்டது.
கேபியை அந்த நாடு புலிகளின் பிரதிநிதியாக ஏற்கவும் மறுத்துவிட்டது. அதாவது, புலிகளின் 'உண்மையான முக்கிய தலைவர்கள்' ஏற்கெனவே எரித்திரியாவின் தொடர்பில் உள்ளதாலேயே அந்நாடு இந்த உறுதிப்பாட்டை மேற்கொண்டுள்ளதாம்.

இன்னும் சில தினங்களில் புலிகள் இந்த 6 விமானங்களையும் பெற்றுக் கொள்வார்கள் என்றும், அவை பறக்கவிருப்பது உறுதி என்றும் சிங்கள பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் எரித்திரியா-புலிகள் உறவை உடைக்க, அந் நாட்டில் தாங்களும் தூதரகம் அமைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்தது. ஆனால், இலங்கையுடன் தங்களுக்கு தூதரக உறவு தேவையில்லை என எரித்திரியா வெளிப்படையாக அறிவித்துவிட்டது. பச்சை தமிழா இன உணர்வு கொள் .

No comments:

Post a Comment