Tuesday, August 31, 2010

தமிழா இன உணர்வு கொள்

ஒரு நட்ப்பான நாட்டிற்கு இருக்கும் ரோசம் கூட நமக்கு இல்லை ஏன்???

எரித்திரியாவில் நிறுத்தப்பட்டுள்ள வான்புலிகளின் 6 போர் விமானங்களை கையகப்படுத்த இலங்கை அரசு தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கை ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே மேற்கொண்டுள்ளEritria Map முயற்சிகளுக்கு குமரன் பத்மநாபன்தான் வெளிப்படையான பெரும் துணையாகத் திகழ்கிறார்.

இந் நிலையில் எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் வான்புலிகளுக்குச் சொந்தமான 6 லேசு ரக விமானங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மேற்கொண்டுள்ளதாக அரசு ஆதரவு சிங்கள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த 6 விமானங்கள் தொடர்பான தகவல்களையும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு குமரன் பத்மநாபன்தான் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த 6 விமானங்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் கேபி உதவியுடன் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கேபியை புலிகளின் பிரதிநிதியாகக் காட்டி விமானங்களை எரித்திரியாவிடம் இலங்கை கோரியது. ஆனால், அவற்றை எரித்ரியா தர மறுத்துவிட்டது.

இந்த விமானங்கள் புலிகளால் வாங்கப்பட்டவை. எரித்திரியா நாட்டில் ஆஸ்மாறா என்னும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எரித்திரிய அரசாங்கம் கோத்தபயாவிடம் கொடுக்க மறுத்துவிட்டதோடு, அதனை அதன் உரிமையாளர்களான புலிகளிடம்தான் கொடுப்போம் என உறுதியாகக் கூறிவிட்டது.
கேபியை அந்த நாடு புலிகளின் பிரதிநிதியாக ஏற்கவும் மறுத்துவிட்டது. அதாவது, புலிகளின் 'உண்மையான முக்கிய தலைவர்கள்' ஏற்கெனவே எரித்திரியாவின் தொடர்பில் உள்ளதாலேயே அந்நாடு இந்த உறுதிப்பாட்டை மேற்கொண்டுள்ளதாம்.

இன்னும் சில தினங்களில் புலிகள் இந்த 6 விமானங்களையும் பெற்றுக் கொள்வார்கள் என்றும், அவை பறக்கவிருப்பது உறுதி என்றும் சிங்கள பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் எரித்திரியா-புலிகள் உறவை உடைக்க, அந் நாட்டில் தாங்களும் தூதரகம் அமைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்தது. ஆனால், இலங்கையுடன் தங்களுக்கு தூதரக உறவு தேவையில்லை என எரித்திரியா வெளிப்படையாக அறிவித்துவிட்டது. பச்சை தமிழா இன உணர்வு கொள் .

Monday, August 30, 2010

DAEMON-Search.com :: STARTPAGE

உலகை உலுக்கும் பாக்டீரியாவை விட்டு பாக்டீரியாவுக்குத் தாவி புதிய வகையான பாக்டீரியாவை உருவாக்கும் 'ஜீன்' இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பரவி வருகிறது.

இந்த 'ஜீன்' இந்தியாவிலிருந்து பரவியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

New Delhi metallo-beta-lactamase-1 அல்லது NDM-1 என்று அழைக்கப்படும் இந்த 'ஜீன்' மூலமாக சுரக்கும் 'என்ஸைம்கள்' புதிய வகையான பாக்டீரியாக்களை உருவாக்கி வருகிறது. வழக்கமான பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறைந்த செலவு என்பதால் இந்தியாவுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைகள் பெற்றுத் திரும்பியவர்கள் மூலம் இந்த ஜீன் பரவியுள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் இந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்ட 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பாக்டீரியாக்கள் எதற்கு அடங்காவிட்டாலும் மிக சக்தி வாய்ந்த மருந்தான carbapenems ரக 'ஆண்டிபயாடிக்' மருந்துகளுக்கு கட்டுப்பட்டுவிடும். ஆனால், இந்த புதிய ஜீன் கொண்ட பாக்டீரியாக்களை இந்த மருந்து கூட அழிக்க முடியவில்லை என்பது தான் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

இதன்மூலம் இந்த பாக்டீரியாவை அழிக்க மருந்தே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்த பாக்டீரியா விரைவிலேயே உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தான் இந்த பாக்டீரியா பரவியுள்ளதாகக் கூறப்பட்டு அதற்கு டெல்லியின் பெயரும் வைக்கப்பட்டுவிட்டதால் நாட்டின் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இங்கு மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவு மிகக் குறைவு என்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பாக்டீரியா முடக்கப்பட்டு, பயம் போகும் வரை இந்தப் பயணிகளின் எண்ணிக்கை பெரும்ளவு சரியும் என்று தெரிகிறது.

சென்னை மற்றும் ஹரியாணாவில் சிகிச்சை பெற்று பிரிட்டனுக்குத் திரும்பியவர்களிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளை சோதித்தபோது அதில் பலருக்கும் NDM-1 பாக்டீரியா தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளதாக ஒரு பிரிட்டன் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

1940களில் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது அனைத்து பாக்டீரியாக்களையும் அழித்துக் காட்டியது. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல பென்சிலினை தாக்குப் பிடிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகிவிட்டன.
Read: In English
இதையடுத்து அடுத்தடுத்து அதிக சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக் மருந்துகளை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டே உள்ளனர். ஆனால், அவை கட்டுப்பாடே இல்லாமல் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் தான் இப்போது அதையெல்லாம் கூட எதிர்த்து நிற்கும் புதிய பாக்டீரியா உருவாகக் காரணமாகிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இப்போது இந்த நவீன பாக்டீரியாக்களை colistin என்ற மருந்தைக் கொண்டு அடக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. ஆனால், இந்த மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த மருந்தை மிக மிக நோயுற்றவர்களுக்கே பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

வாழ்வின் கடைசி நொடியையும் வாழ்ந்து பார்ப்போம்

my best wishes for krishna jayanthi
பயிரும் உயிரும்


பச்சை பயிர் வளர்க்க

படிக்க உயிர் கொடுத்து
அனுப்பிய பெற்றோர்
என்ன தவமும் பாவமும் செய்தனோரோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட பேருந்தில் கருகிய (க)விதைகளை
எரித்த கயவர்கள
ுக்கு
எப்போதுதான் யமன் வருவான்
என்னவென்று சொல்வதம்மா ! The charred remains of StudentsMuniyappan, Nedunchelian, Ravindran The burning Coimbatore agri univ bus ADMK men accused in Bus burning
எரிந்தது கனவா ?
இல்லை சமுதாயமா?
??
இதற்குமேல் இது வேண்டாம்
வேண்டும் முற்றுப்புள்ளி

நினைப்பதே நடக்கும்! மறக்காதே !